உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை!
உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை நாட்டியுள்ளது.
2025 வாசகர்களின் தேர்வு விருதுகளின் அடிப்படையில் உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது.
95.56 புள்ளிகளை இலங்கை பெற்றுள்ளது.
98.33 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தாய்லாந்தும் 96.92 புள்ளிகளுடன் இத்தாலி இரண்டாவது இடத்திலும் 96.77 புள்ளிகளுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
குறித்த தரப்படுத்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நாடும் மக்களிடையே பிரபலமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவுகளுக்கான மசாலா, நிறம் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் அற்புதமான கலவையால் இலங்கை குறித்த இடத்தைப் பெற்றுள்ளதாகத் தரப்படுத்தல் குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் உணவு சுவையை அறிந்து கொள்ள பெட்டா சந்தை ஓர் சிறந்த இடம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உணவுகளான கொத்து ரொட்டி, அப்பம் போன்றவை சிறந்த தெரிவுகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலானவை வீட்டு சமையல் மரபுகளை மையமாகக் கொண்டுள்ளன, மேலும் தலைமுறை குடும்ப சமையல் குறிப்புகளின் இந்த அன்பான தொடுதல்தான் இங்குள்ள உணவை உண்மையில் சிறப்புறச் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.