துரதிஷ்டமான காலக்கட்டத்தில் இலங்கை மக்கள்! ஞானசார தேரர்
இலங்கை மக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட துரதிஷ்டமான காலக்கட்டமாக தற்போதைய காலக்கட்டம் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் தேரர்களையும் சாடி வருகின்றனர் என்று அவர் குறிபிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை (31-03-2022) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வாழ்க்கையை கொண்டு செல்வதில் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். நாட்டில் எரிபொருள், எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இன்றி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது.
எனவே பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட துரதிஷ்டமான காலக்கட்டமாக இது உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.