இலங்கையில் உள்ள இந்த இரு கடைகளுக்கு பூட்டு!
இலங்கையில் 74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாக கருதப்பட்டு நாளைமறுதினம் (04-02-2022) வெள்ளிக்கிழமை இடம்பெற்றவுள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், உரிமம் பெற்ற ஏனைய சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது
இதேவேளை, நாளைமறுதினம் (04-02-2022) வெள்ளிக்கிழமை இறைச்சிக்காக விலங்குகளை வெட்டும் இடங்கள், இறைச்சி விற்பனை கடைகள் ஆகியவற்றை மூடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் நாளைமறுதினம் இடம்பெறவுள்ளது.