இலங்கையின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து வெளியான இறுதி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 அவது பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி மொத்தமாக 6,863,186 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், மொத்தமாக 159 நாடாளுமன்ற ஆசனங்களை தன் வசமாகியுள்ளது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி மொத்தமாக 1,968,717 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 5 தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் இணைத்து மொத்தமாக 40 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியானது மொத்தம் 257,813 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் உள்ளடங்களாக மொத்தம் 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி மொத்தமாக 500,835 வாக்குகளை பெற்றுள்ளதுடன் 2 தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் இணைத்து மொத்தம் 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொத்தமாக 350,429 வாக்குகளை பெற்றுள்ளதுடன், ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மொத்தம் மூன்று ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மொத்தம் 87,038 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், 1 தேசியப் பட்டியல் ஆசனத்துடன் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சி 178,008 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 66,234 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன்,1 ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உள்ளடங்களாக, ஏனைய அரசியல் கட்சிகள் சில 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.