பாகிஸ்தான் செல்லும் இலங்கை தமிழ் பெண்ணுக்கு நிதி அன்பளிப்பு!
இலங்கையில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் குத்துச்சண்டை போட்டியில் கல்ந்துகொள்ளவிருக்கும் தமிழ் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
குறித்த பெண் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள கணேஷ் இந்துகாதேவி என்ற தமிழ் பெண்ணான இவ்வாறு குறித்த போட்டியில் பங்கேற்க தெரிவாகியுள்ளார்.
மேலும் குறித்த பெண்ணின் குடும்ப நிதி நிலைமைக்கு ஒத்துழைக்காத நிலையில், யுவதி விடுத்த கோரிக்கையை ஒன்றை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையை ஈடுசெய்யும் முகமாக, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் என்பவர் பல்வேறு அன்பர்களின் நிதி அன்பளிப்பு ஊடாக 1,05,000 நிதியுதவி இன்று (11-01-2022) மாலை வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் வைத்து குறித்த யுவதியிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.