கிரிகெட் கிரவுண்டான எரிபொருள் நிரப்பு நிலையம்; சர்வதேச அளவில் பேசுபொருளான இலங்கை !
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் கிரிக்இன்போ இணையத்தளமும் இது குறித்து செய்தியினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கிரிக்இன்போ இணையதளத்தின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் இட்டுள்ள விசேட பதிவு ஒன்று பலரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
நாட்டிலுள்ள பெட்ரோல் நிரப்பு நிலையம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தை கிரிக்இன்போ இணையத்தளம் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியால் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
