இலங்கைக்கு பாரியளவு நட்டம்: சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
இலங்கையில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியானதால் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு ஏற்றுவதற்காக கையளிக்கப்பட்ட பைசர் கொரோனா தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகியுள்ளன.
இதனால் சுமார் 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. ஒரு பைசர் தடுப்பூசி 6 முதல் 7 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு 1.9 மில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிகளை பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பெற்றுக் கொள்ளாத காரணத்தினால் இவ்வாறு பாரியளவு தொகை பணம் அரசாங்கத்திற்கு நட்டமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.