இலங்கையில் 95 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை 225 புதிய கொரேனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 356 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 91 775 பேர் குணமடைந்துள்ளதோடு, 2940 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின.
புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியா, இரத்தம் நஞ்சானமை மற்றும் புற்றுநோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.