இது நாட்டுக்கு நல்லதல்ல - பாக்கீர் மாக்கார் விடுத்த எச்சரிக்கை
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை (Cardinal Malcolm Ranjith Antakai) அரசாங்கம் எவ்வாறு ஜெனிவா நோக்கி தள்ளியதோ, அதுபோல ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் (Mohammed Abdul Bakeer Markar) தெரிவித்துள்ளார்.
இதன்போது, தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09-03-2022) இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்சட்டமூலத்தால் தகவலரியும் உரிமைச் சட்டத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என அச்சப்படுகிறது. ஊடக அமைப்புக்ககள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
எனவே இச்சட்டமூலத்தை காலந்தாழ்த்தி இது தொடர்பில் அனைத்து ஊடக அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
உள்நாட்டு விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தற்போதயை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) முதலில் சென்றிருந்தார்.
தற்போது நாட்டிலுள்ள அனைவரும் மனித உரிமைகள் பேரவைக்கு செல்கிறார்கள். கார்டினலும் ஜெனிவாவுக்கு சென்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இதனால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.