க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள், தங்களுக்கான அனைத்துப் பாடங்களினதும் பரீட்சைகள் முடிவடைந்திருந்தால், கொரோனா தடுப்பூசியின் 2 வது டோஸை உடனடியாகப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது பாடசாலை மாணவர்களுக்கு, Covid19 தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே (Samitha Ginige) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின், பாடசாலை அமைப்பில் உள்ள 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7 இலட்சத்து 45 ஆயிரம் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டன.
தற்போது க.பொ.த உயர் மாணவர்களுக்கான பரீட்சையில், பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் முடிவடைந்துள்ளன. அந்த மாணவர்கள் எந்தவொரு மருத்துவ அதிகாரி பிரிவிலும் தமக்கான கொரோனா 2 வது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.