யாழில் நாயுடன் மோதி விபத்து; இளைஞன் உயிரிழப்பு
Jaffna
Accident
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (10) உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US