அல்ஹைதாவிற்கு நிதி வழங்கும் இலங்கை; சர்வதேச நிறுவனம் பகீர் தகவல்
அல்ஹைதாவுடனான வர்த்தக தொடர்பிற்காக அமெரிக்காவினால் தடைவிதிக்கப்பட்ட இலங்கையின் இரத்தினக்கல் நிறுவனம் தொடர்ந்தும் அல்ஹைதாவிற்கு நிதி வாங்கியதாக கரோன் எனப்படும் சர்வதேச நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது .
அல்ஹைதாவை சேர்ந்த அஹமட் லுக்மான் தலிப்பின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளிற்கு உதவியதாக கருதப்படும் இலங்கையை சேர்ந்த இரத்தினக்கல் நிறுவனம், தலிப் கைதுசெய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பின்னரும் அவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தடை
தலிப் மீதும் அவுஸ்திரேலியாவில் அவருக்கு சொந்தமாக காணப்பட்ட இரத்தினக்கல் வியாபாரத்திற்கு எதிராகவும் அமெரிக்காவின் திறைசேரி 2020 ஒக்டோபரில் தடை விதித்தது.
அதன் பின்னர் அவர் 2021 இல் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட,பின்னர் நவம்பர் 2022 இல் அவரது இரு உறவினர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா தடை விதித்தது.
இலங்கையில் உள்ள இரத்தினக்கல் நிறுவனம்
இந் நிலையில் இலங்கையில் உள்ள இரத்தினக்கல் நிறுவனமே அல்ஹைதாவிற்கு நிதிதிரட்டும் நடவடிக்கையில் பிரதானமாக விளங்கியது என கரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தக நிறுவனம் இலங்கையின் தென்மேற்கு கரையோரப்பகுதி முகவரியை கொண்டுள்ளது, இந்த முகவரி முகமட் ஹரிஸ் நிசார் என்பவருக்கு சொந்தமானது என்றும் , அவர் தலிப்பின் உறவினர் - அவருக்கு எதிராகவும் நவம்பர் ஒன்பதாம் திகதி அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.
இந்நிலையில் 2020 இறுதியில் இலங்கையை சேர்ந்த இரத்தினக்கல் நிறுவனம் 100,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பெறுமதியான இரத்தினக் கற்களை தலிப்பின் நிறுவனத்திற்கு வழங்கியது என புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 முதல் தலிப் நிசாரிற்கு வர்த்தக நடவடிக்கைகள் மூலம் வருடாந்தம் 200,000 டொலருக்கும் அதிகமான இலாபம் கிடைத்தது என புதிய அறிக்கை தெரிவித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.