எரிபொருளுக்காக காத்திருப்பதால் எத்தனை மணிநேரம் விரயமாகிறது தெரியுமா?
இலங்கையில் அண்மைக்காலமாக கடுமையான எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்றது.
மேலும் நாட்டு மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்கும் அவலநிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இவ்வாறு நீண்ட வரிசையில் நீன்றும் கூட மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
எரிபொருளுக்கு மணிக்கணக்காக காத்திருப்பதால் எத்தனை மனித நேரம் விரயமாகின்றது. (1Hr = Rs 1500- Rs 5000). ஏன் வைத்தியசாலைகள் போன்று ஒரு இலக்க சீட்டு வைக்கப்பட்டு அவர்களின் நேரத்தை ஒரு இணையத்தில் அல்லது ஒரு கரும்பலகையில் எழுதி இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியாது?
ஒருவரும் சிந்திக்கின்றார்கள் இல்லையா அல்லது ஒருவருக்கும் சிந்திக்கும் திறன் இல்லாமல் போய் விட்டதா?
கொஞ்சம் அட்வான்ஸ் ஆக யோசித்தால் ஒன்லைன் முன்பதிவு கூட செய்யலாம். என முகநூலில் Kumaravelu Ganesan என்ற நபர் குறித்த பதவியை வெளியிட்டுள்ளார்.