295 மில்லியன் டொலர்கள் செலவில் கிழங்கு இறக்குமதி; மொட்டு எம்பி தெரிவிப்பு
இலங்கையில் கடந்த வருடம் 295 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பொதுவாக விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விதானகே, இறக்குமதியில் சேமங் கிழங்கு (கிரி அல), பூண்டு, உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி, தர்பூசணி, பயற்றங்காய், அன்னாசி போன்ற சில பொதுவாக வளர்க்கப்படும் உணவுகள் அடங்கும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்பார்க்கும் நிலையிலேயே இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு அமைச்சர்கள் தமது அமைச்சுக்களில் கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், பொதுவாக விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொருளாதாரத்தை உருவாக்குவது அர்த்தமற்றது என்றார்.