மீண்டும் எகிறிய தங்கவிலை; நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை நவம்பர் மாதம் முதல் நாளே அதிரடியாக குறைந்த நிலையில், தற்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நகை வாங்க காத்திருந்தோர் வாங்கலாமா வேண்டாமா எனும் மனநிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன் படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 200 ஒரு சவரன் ரூ.45,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து கிராம் ரூ.4,694க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,552க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.