எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு ; 7 பேருக்கு பயணத்தடை
இலங்கை கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஓஷத மிஹார மகாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கப்பலின் மின்னஞ்சல் அமைப்பு நீக்கப்பட்டதாகவும், ஆபத்து இல்லை என்ற கூற்றுக்கள் இருந்தபோதிலும் கப்பலுக்கு நுழைவு அனுமதி வழங்க ஹார்பர் மாஸ்டரை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகள் மட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையாகிய பிரதி மன்றாடியார் நாயகம் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்கால சட்ட நடவடிக்கைகள் தொடர்பில், கலந்துரையாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான், வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.