அத்தியவாசியப் பொருட்கள் தொடர்பில் அமைச்சர் பசில் வெளியிட்ட முக்கிய தகவல்!
சுங்கத் திணைக்களத்தில் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல்வேறு பகுதிகளுக்கு பொருட்களை உற்பத்தி செய்து தொடர்பான தரவுகள் தங்களிடம் இல்லை. சுங்கம் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் விவரங்களின்படி, தற்போது சந்தையில் மூன்று மாதங்களுக்கு போதுமான பொருள்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் சில பொருட்கள் பல்வேறு காரணங்களால் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைக்காமல் போகலாம் ஏற்றுக்கொள்கின்றேன்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பிராந்திய தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.