மின்கட்டணம் குறைப்புத் தொடர்பில் வெளியான தகவல்
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் (15.01.2024) ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த யோசனை கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதன் பிறகு மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்படும் என சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அனுமதி வழங்க திட்டம்
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரமளவில் மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகளை சுயாதீன நிறுவனத்தினூடாக கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக சபையால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுயாதீன கணக்காய்வு நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.