மதமும் அரசியலும் தனித்தனியாகச் சென்றால் கடவுள்களும் கூட மகிழ்ச்சியடைவார்கள்!
அரசியல்வாதிகளை சந்திக்க மறுப்பதாக மல்வத்தை மகாநாயக்கர் எடுத்த தீர்மானத்தை அனைத்து மத தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய இலங்கைச் சீர்திருத்தத்தில் "மதமும் அரசியலும் தனித்தனியாகச் சென்றால்" நமது கடவுள்களும் கூட மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை அடுத்து மக்கள் வீதிகளுக்கு இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
දේශපාලකයන් හමුවීම ප්රතිකේෂ්ප කිරීමට මල්වතු මහ නාහිමියන් ගත් තීරණය සියලු ආගමික සියලු නායකයින් විසින් ද අනුගමනය කළ යුතුයි. #ශ්රීලාංකීක වත්මන් ප්රතිසංස්කරණය තුළ "ආගම සහ දේශපාලනය වෙන් වෙන්ව" ගමන් කරන්නේ නම් අපේ දෙවිවරු පවා සතුටු වෙති. #මනෝගනේසන් #GoHomeGota pic.twitter.com/FkCmWwygsD
— Mano Ganesan (@ManoGanesan) May 2, 2022
இதனையடுத்து ராஜபக்ச அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு உதவியாக இருந்து ஆசீர்வதித்த மல்வத்தை மகாநாயக்கர் , நாட்டில் மாற்றம் ஏற்படும்வரை எந்த ஒரு அரசியவாதியையும் தாம் சதிக்கப்போவதில்லை என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்து தொடர்பிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்