சீருடையுடன் செருப்பு அணிந்து கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்க்கு நேர்ந்த கதி!
சீருடையுடன் செருப்பு அணிந்து கொண்டுபோக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பிரதி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பொலிஸ் சார்ஜன்ட் பொலிஸ் சீருடையுடன் சப்பாத்து அணியாமல் செருப்புடன் போக்குவரத்து கடமை ஈடுபட்டிருந்தார்.
இவர் வாகனம் ஒன்றை மடக்கிப்பிடித்து வழக்குப் பதிவு செய்து கொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் சாரதி பொலிஸ் சார்ஜன்ட் செருப்புடன் கடமையில் ஈடுபட்டு இருப்பதை கைத்தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்த்து விசாரணை மேற்கொண்டு அவரை இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.