அபார வெற்றி பெற்ற இலங்கை!
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் குர்பாஸ் 45 பந்துகளில் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ச 14 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
மேலும், பெதும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 36 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.