பேராபத்தில் இலங்கை: புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்புகள்!
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 124 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தள்ளனர்.
நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.
நாட்டில் இதுவரை பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 9 ஆம் திகதி திங்களன்று 118 உயிரிழப்புக்கள் உறுதி செய்யப்பட்டன.
இதுவே ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான COVID-19 உயிரிழப்புக்களாக பதிவாகியிருந்த நிலையில், இன்று 124 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
75 ஆண்களும் 49 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 55 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 19 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள், ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்.