வெம்பி வெம்பி அழுத குழந்தைகள்: போலீஸ் வண்டியில் அழைத்து சென்ற அதிகாரிகள்!
லேக்ஹவுஸ் முன் சந்தியில் 2 குழந்தைகள் உட்பட 4 சிறுவர்களை போலீஸ் வண்டியில் ஏற்றி காவல் நிலையத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
லேக்ஹவுஸ் முன் சந்தியில் 2 குழந்தைகள் 4 சிறுவர்கள் வெம்பி வெம்பி கீரிட்டு அழுது கொண்டிருந்தது உள்ளனர்.
குறித்த குழந்தைகளை போலிஸார் காட்டாயபடுத்தியும், பெண் பொலிஸார் மென்மையாக பேசியும் வண்டியில் ஏற சொல்லியுள்ளனர். இதன்போது ஒரு சிறுமி தந்தை என்பவரை இழுத்து பிடித்து கட்டிப்பிடிச்சு அழுகிறது.
இவ்வாறான நிலையில் ஒரு ஜென்றல் மேன் வந்து பொலிஸாருடன் அவர்களை ஏன் வதைக்கிறீர்கள் என முரண்பட்ட போது பொலிஸ் அதிகாரிகள் பிரச்சனை பெருசாக விலகி செல்கிறார்.
இதேவேளை குறித்த நபர் பெண் பொலிஸாரிடம் என்ன அச்சு என கேட்ட போது அவர்கள் சொன்னது தந்தை என்னபடுபவர் குடித்து விட்டு நிதானம் இழந்து இருகிறார் எனவும் அவர்களை பொலிஸ் நிலையத்தில் கொண்டு சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த ஜென்றல் மேன் தமிழ் பேசுவோரா என கேட்க ஆம் என்றவுடன் அந்த குழந்தைகளுக்கு தமிழில் அவரும் பயப்பட வேண்டாம் அவர்கள் உங்களை கூட்டிட்டு போய் விடுவார்கள் என்று சொல்லி ஏற்றி அனுப்பிவிட்டுள்ளார்.
பின் குறித்த நபருக்கு அவசர வேலை வந்துவிட்டது என சென்றுள்ளார். ஆனாலும் அந்த நபருக்கு இன்னும் அவர்கள் தொடர்பாக பலத்த கேள்விகளும் சந்தேகங்களும் வந்து கொண்டே இருப்பதாக Nirupan Prabha என்பவர் இந்த பதிவை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.