இலங்கை இராணுவம் ஊடாக அமெரிக்காவின் இரகசிய திட்டம்: பயத்தில் இந்தியா!
இந்தியாவை பொருத்தவரையில் மேற்குலக நாடுகள் இலங்கையில் கால் பதிப்பதை இந்தியா பாரிய ஆபத்தாகவே கருதுகின்றது.
இந்நிலையில் இலங்கை இராணுவத்தின் ஊடாக அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கையால் இந்தியா சிதறிவிடும் என்ற பயத்தில் உள்ளது என பிரித்தானியாவின் Wales யில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் ஊடாக அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கை, சமூக மட்டத்தில் இராணுவம் தொடர்பில் தொக்கி நிற்கும் கேள்விகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி பிரபாகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்தது,
இலங்கையின் உடனான அமெரிக்காவின் அனைத்து உடன்படிக்கைகளும் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் நண்பர்கள் எனின் இந்தியாவின் அழுத்தம் மூலம் உடன்படிக்கைகள் வெற்றி பெற்றிருக்க முடியும். நிலைமை அவ்வாறு இல்லை.
இதேவேளை, சீனாவை எதிர்க்காத சிங்கள மக்கள் அமெரிக்காவை எதிர்கின்றனர். எனினிம் இதனை இந்தியா கண்டுக்கொள்ளவில்லை. இந்தியா அக்கறை கொள்ளவில்லை. மறைமுகமாக செயற்பட்டு வருகின்றது.
இருப்பினும், தமிழ் மக்களின் பிரச்சினையை அனைத்து உலக மட்டத்திற்கு இந்தியா கொண்டு சென்றது. இந்தியாவின் பூகோள அரசியலுக்கு இலங்கை தேவை. அமெரிக்காவின் நகர்வை இந்தியா ஆபத்தாகவே கருதுகின்றது.
மேற்கு உலகம் இலங்கையில் கால் பதித்தால் அல்லது தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் இந்தியா என்ற தேசம் சிதறி சிறிய நாடுகளாக மாறிவிடும் என்ற பயம் இந்தியாவிற்கு அச்சம் உள்ளது.
இந்தியாவின் உடைவை மேற்குலகமும், அமெரிக்காவும் மறைமுகமாக அனுசரனை வழங்கி ஆதரிக்கும் என்ற பயம் இந்தியாவிற்கு உள்ளது. எனவே, சீனாவின் நகர்வை இந்தியா கண்டுக்கொள்ளாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.