இலங்கையில் இடம்பெற்ற மீண்டுமொரு பயங்கர சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்
இலங்கையில் உள்ள பகுதியொன்றில் மீண்டும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஹோட்டலில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்தபோது, அங்கிருந்த சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளது.

இதையடுத்து குறித்த பிரதேச மக்கள்,பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்தினால் சமைத்த உணவுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மூன்று வயது மகன் மீது விழுந்த தந்தை ; இறுதியில் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன பிஞ்சு உயிர்
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?