இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 ஓவர் கிரிக்கட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, டிக்கெட் கொடுக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
மேலும், தம்புள்ளை மற்றும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள டிக்கெட் கரும பீடங்களை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஓவர் போட்டியை காண 18,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரண்டாவது டி20 ஓவர் போட்டி நாளை (19) நடைபெறவுள்ளதுடன் மூன்றாவது டி20 ஓவர் போட்டி 21ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.