போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Drugs
By Vironika May 08, 2026 06:03 AM GMT
Report

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை! | Speed Up Punishments For Drug Traffickers

முழு நாடுமே ஒன்றாக

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுச் சபை நேற்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்த கூட்டத்தின் போது, நாட்டில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு கொள்ளை; அதிகாலை இடம்பெற்ற சம்பவம்!

பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு கொள்ளை; அதிகாலை இடம்பெற்ற சம்பவம்!

இந்தச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் இந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரையும் ஒன்றிணைத்து 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டை இதன் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்தத் தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகள் 80% இனால் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

விஜய்க்கு இலங்கை தேரர் விடுத்த எச்சரிக்கை ; யாழ்ப்பாணத்தை கொடுக்க கூறிய அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி

விஜய்க்கு இலங்கை தேரர் விடுத்த எச்சரிக்கை ; யாழ்ப்பாணத்தை கொடுக்க கூறிய அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025.10.30 ஆம் திகதி முதல் இதுவரை 5437.457 கிலோ கிராம் கஞ்சா, 1936.325 கிலோ கிராம் ஹெரோயின், 1991.414 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 271.724 கிலோ கிராம் கொக்கைன், 1,574,895 போதை மாத்திரைகள் மற்றும் 629,988 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனுடன் தொடர்புடைய 168,460 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

யாழில் வீட்டில் உணவகம் நடத்தியவருக்கு கடும் எச்சரிக்கையுடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

யாழில் வீட்டில் உணவகம் நடத்தியவருக்கு கடும் எச்சரிக்கையுடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இதன்போது, 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

புனர்வாழ்வு செயல்முறை, அதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US