விஜய்க்கு இலங்கை தேரர் விடுத்த எச்சரிக்கை ; யாழ்ப்பாணத்தை கொடுக்க கூறிய அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி
யாழ்ப்பாணத்தை ஆளுவதற்கு தமிழக நடிகர் விஜயை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அழைப்பதானது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தளபதி விஜய்! எங்கள் நாட்டை நோக்கி விரல் நீட்ட வேண்டாம். நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான்; முழு இந்தியாவின் தலைவரோ பிரதமரோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

வீதியில் கூட நடமாட முடியாது..
நாடாளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அர்ச்சுனா இதே கருத்துகளை அவர் வெளியில் பேசியிருந்தால் வீதியில் கூட நடமாட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்! நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான்; முழு இந்தியாவின் தலைவரோ பிரதமரோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இலங்கையின் உள்நாட்டுச் செயல்பாடுகளில் தலையிட முயன்றால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தக்க பதிலடி கொடுப்போம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மத்திய வங்கியின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட தேரர், இது உண்மையானால் அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.