புத்தாண்டு இரவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ; கொழும்பில் விசேட கண்காணிப்பு

Sri Lanka Police Colombo Galle Sri Lankan Peoples
By Sahana Dec 31, 2025 07:41 PM GMT
Report

புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் 8 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் அதிரடி சோதனை ; 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

பொலிஸாரின் அதிரடி சோதனை ; 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

மேல் மாகாணத்தில் சுமார் ஆயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் மாத்திரம் 700 மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிபாதுகாப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.

புதன்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் முக்கியபல பகுதிகளில் மாலை 6 மணி முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும்.

புத்தாண்டு இரவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ; கொழும்பில் விசேட கண்காணிப்பு | Special Traffic Plan Colombo New Year Celebrations

வாகன நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் வீதிகளில் ஒருவழிப் போக்குவரத்து முறைமை பின்பற்றப்படும். கனரக வாகனங்கள் கொழும்பு நகருக்குள் நுழைவது மாலை முதல் தடைசெய்யப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 4000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மெரைன் டிரைவ், போர்ட் சிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இதற்கான தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

இல்லையெனில் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும். குறிபாக காலி முகத்திடல் வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி நிறுத்தப்படும் வாகனங்களை கொண்டு செல்வதற்கு விசேட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் மாத்திரம் 700 க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிய 75 ஆயிரம் நவீன சுவாசப் பரிசோதனைக் (மதுசார பரிசோதனைக்) கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அவ்வாறு கைதாகும் நபர்கள் சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்ப்படுத்தப்படுவர்கள். மோட்டார் சைக்கிள்களில் வருவோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

அதிக சத்தமிடும் ஒலிப்பான்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், வாகனங்களுக்கு வெளியே தலை அல்லது கைகளை நீட்டி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம். கொண்டாட்டங்களின் போது சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.

பொலிஸாரின் அதிரடி சோதனை ; 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

பொலிஸாரின் அதிரடி சோதனை ; 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US