மேல் மற்றும் தென் மாகாணங்களில் விசேட சோதனை நடவடிக்கை ; 2 பேர் கைது
மேல் மற்றும் தென் மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவல்துறை விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பேரும் முல்லேரியா மற்றும் அங்கொட பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் 4 பேரும் கைதாகியுள்ளனர்.
மேல் மற்றும் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மேல் மற்றும் தென் மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ்
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப் பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.