மே தினத்தன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள்
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின், அப்பகுதிகளைத் தவிர்த்து மாற்று வீதிகள் வழியாக வாகன போக்குவரத்தை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மாற்று வீதிகள் பற்றிய தகவல்கள் தேவைப்படும் போது, வாகன போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து உதவி பெறலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.