கடல் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பக்கத்துவீட்டுக்காரனால் விசேட தேவையுள்ள சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், அது இலங்கையை விட்டு விலகி நகரும் சாத்தியம் இருப்பதாகவும், அடுத்த 36 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் மழை அளவு அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25–35 கி.மீ வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50–60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், ஏனைய பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை உயரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்போது கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.