இறம்பொடை பேருந்து விபத்து தொடர்பில் விசேட குழுவினால் விசாரணைகள் ஆரம்பம்
இறம்பொடை பேருந்து விபத்து தொடர்பில் விசாரித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பதில் காவல்துறை மா அதிபரால் நியமிக்கப்பட்ட விசேட குழு, இன்றைய தினம் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த குழு எதிர்வரும் நாட்களில் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களைப் பெறவுள்ளதுடன், தடயவியல் சாட்சியங்களையும் சேகரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சாட்சியங்களுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மோட்டார் வாகன பரிசோதகர்கள் மற்றும் விசேட நிபுணர்களின் ஆய்வு முடிவுகளும் ஆராயப்படவுள்ளன.
அதன்பின்னர், குறித்த விபத்து தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த விசாரணை குழுவின் தலைவர் சிரேஷ்ட பதில் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்ததாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.