பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் பாவனையை தடுக்க விசேட நடவடிக்கை
பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கில், பொலிஸாருடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பல்கலைக்கழகங்களுக்குள் வெளிநபர்களால் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதாக எழுந்துள்ள கவலைகள் குறித்து, குறித்த கலந்துரையாடல்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்த பிரதியமைச்சர், பல்கலைக்கழக வளாகங்களில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.