வரவு–செலவுத் திட்டத்தில் சாதனை ; வடக்கு மாகாண சபையின் அபூர்வ வெற்றி
2025ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர். சிவரூபன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில், 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, நேற்று (01) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், 2024ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டுக்காக சுமார் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்திலிருந்தே திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மாகாணத்தில் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களை அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர். சிவரூபன் மேலும் கூறுகையில், வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நூறு சதவீதக் கட்டு நிதியும் திறைசேரியிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு வரை 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பௌதீக முன்னேற்றத்தில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முன்னிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் கருத்துரைக்கையில், வடக்கு மாகாணம் இம்முறை ‘பூச்சிய வரவு–செலவுத் திட்டம்’ என்ற சிறப்பான நிதி முகாமைத்துவ நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களை, நிதி ஆணைக்குழுவின் புதிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாகாணத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், 2024ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டுக்காக சுமார் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்திலிருந்தே திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மாகாணத்தில் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களை அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் அவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர். சிவரூபன் மேலும் கூறுகையில், வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நூறு சதவீதக் கட்டு நிதியும் திறைசேரியிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு வரை 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பௌதீக முன்னேற்றத்தில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முன்னிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் கருத்துரைக்கையில், வடக்கு மாகாணம் இம்முறை ‘பூச்சிய வரவு–செலவுத் திட்டம்’ என்ற சிறப்பான நிதி முகாமைத்துவ நிலையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களை, நிதி ஆணைக்குழுவின் புதிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாகாணத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.