நோயாளிகளுக்குப் பேரிடி ; மருந்து இறக்குமதி குறித்து வெளியான விசேட அறிவிப்பு
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்று நீக்கி (Antibiotics) மற்றும் இன்சுலின் உள்ளிட்ட சுமார் 15 வகையான மருந்துகள் தற்போது போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

தற்போதுள்ள மருந்து வகைகள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில், ஏனைய நாடுகளில் இருந்தும் இந்த மருந்துகளை இறங்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மருந்து தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.