தொழில் திணைக்களத்திலிருந்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்
தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிரதேச, மாவட்ட மற்றும் உப தொழிலாளர் அலுவலகங்களிலும் EPF கொடுப்பனவுகள், பதிவுகள் மற்றும் டிஜிட்டல் EPF கட்டமைப்பு சார்ந்த சேவைகள் இந்த இரண்டு நாட்களிலும் வழங்கப்படமாட்டாது.

அதேவேளை, குறித்த தினங்களில் சேவைகளைப் பெற முன்கூட்டியே நேரம் ஒதுக்கியவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக தினத்தில் வருகை தந்து தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.