நாடாளுமன்ற நூலகத்தில் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஆணைக்குழு அறிக்கையின் 28 தொகுதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக நாடாளுமன்ற நூலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்னவென்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை இந்த சாட்சியங்களை தற்போது வழங்குவதில் பயனில்லை எனவும், இதனை ஒரு வருடத்துக்கு முன்னரே வழங்கியிருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பிரதம கொறடா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், உறுப்பினர்கள் அது குறித்து தமது கருத்துக்களை தெரிவித்திருக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.