இரண்டு சட்டமூலங்களுக்கான சான்றிதழை அங்கீகரித்த சபாநாயகர்!
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கான சான்றிதழை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அங்கீகரித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் இன்று (செப். 08) அங்கீகரித்ததாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு சட்டமூலங்களும் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (செப். 06) மற்றும் வியாழக்கிழமை (செப். 07) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்படி, 2023 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமும் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.