தென்னிலங்கையில் தீவிரமடையும் இளைஞர் யுவதிகளின் போராட்டம்; கூடாரங்களில் நடப்பது என்ன?
அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் தங்கியுள்ள இளையவர்கள் பற்றி இணையத்தில் சில விசமிகள் போலி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
அரச ஆதரவாளர்களே இந்த போலிச்செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகின்றது. கோட்டா கோ கம என பெயரிட்டு அரசங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் மற்றும் மக்களினால் முன்னெடுக்கபட்டுள்ள நிலையில் , காலி முகத்திடலில் கூடாரம் அமைத்து இளையவர்கள் தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் அங்குள்ள கூடாரங்களிற்குள் ஆண்களும், பெண்களும் பாலுறவு கொள்கிறார்கள் என்றும், போராட்டத்திற்கு சென்ற உங்கள் மகள்கள் சமூப்பிறழ்வில் ஈடுபடுகிறார்கள் என பெற்றோர்களை எச்சரிக்கும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றது.
அத்துடன் , காலி முகத்திடல் கூடாரங்களுடன், வீதியில் ஆணுறைகள் சிதறிக்கிடக்கும் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை 2021 இல், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், தும்கூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஆணுறைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்திற்குள்ளாகி, வீதியில் ஆணுறைகள் சிதறிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த புகைப்படத்தை, காலி முகத்திடலில் எடுக்கப்பட்டதாக அரச ஆதரவாளர்கள் போலி செய்தியை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகின்றமை மக்களிடையே கடும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.