நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா ; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மார்க் சப்மேன் 48 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி 176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் அணித் தலைவர் எய்டன் மர்க்ரம் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று வெற்றிக்கு பங்காற்றினார்.