அவதானம் மக்களே; பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று
அதன்படி ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த எச்சரிக்கை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; சம்பவத்தால் அதிர்ச்சி!
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடலுக்கு அப்பாலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.