இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம்; மாப்பிள்ளை இவர்தானாம்!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தெஇவிக்கப்படுகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் ‘ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு , அமீன் என்ற மகனும், கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதில், மூத்த மகளான கதீஜாவுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, நிகழ்வில் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமண திகதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. தந்தையைப் போலவே இசையில் ஆர்வமுள்ள கதீஜா பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள கதீஜா, “ரியாஷ்தீன் ஷேக் முகமது என்பவருடன் என்னுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ரியாஸ்தீன் சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். இவர், பிரபல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘தமாஷா’ என்ற ஹிந்தி படத்தில் அவர் பணிபுரிந்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.