அவசரமாக தரையிறக்கப்பட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி சென்ற விமானம்!
இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் மும்பையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
எனினும் அவர்கள் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.