பிக்பாஸ் கதிரவன் பற்றி யாரும் அறிந்திராத தகவல்கள் இதோ!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி 6 சீசன் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கு பற்றிய நிலையில் இதுவரையில் 4போட்டியாளர்கள் வெளியேறி உள்ளார்கள்.
இந்த நிலையில் இதில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர் தான் கதிரவன். இவர் யார் என்பதை பார்ப்போம்...
பிக்பாஸ் கதிரவனுக்கு இன்னுமொரு பேர் இருக்கிறது புருவாச் கதிரவன், இவரது தந்தை கல்கத்தாவில் உதவி கமிஷனராக இருந்துள்ளார் இவரது தாயார் பாடசாலை ஆசிரியராக இருந்துள்ளார்.
கதிரவன் சென்னையில் பிறந்து வளர்த்துள்ளார், இவர் சென்னையில் தான் வீ டெக் முடிச்சிருக்கிறார். இவருக்கு வயது 30+ ஆகிறது, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம்,
ஆனால் திருமணம் முடிந்தது போல் ஒரு காணொளி ஒன்று 2017-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.
ஆனால் அது என்னோடு நீயிருந்தால் என ஒரு ஆல்பம் பாடல் நடத்திருந்தார் அதில் திருமணம் நடப்பதுபோல் ஒரு காட்சி வரும் அதைத்தான் வைரலாக்கி இருக்கிறார்கள், ஆனால் பொதுவாக அவர் எந்த இடத்திலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியதில்லையாம்.