வெளிநாடொன்றில் இருந்து வெளியேற மறுக்கும் இலங்கையர்கள் சிலர்!
இலங்கையர்கள் 18 பேர் சூடானிலிருந்து வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் தங்களது வேலை இழக்க நேரிடும் என்று கூறி சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரையில் சூடானிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 34 இலங்கையர்களை வெளியேற்றும் பணியை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அவர்களில் 14 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் சவுதி அரேபியாவின் ஜித்தாவை சென்றடைந்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.
மேலும் 14 இலங்கையர்கள் போர்ட் சூடானில் தங்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.