உடல் பருமனை குறைக்க எளிய சில பானங்கள்
உடல் பருமன் என்பது இன்றைய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம் நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம்.
நம்மில் பெரும்பாலோர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா என அதிக எடையைக் குறைக்க பல வழிகளைக் கடைப்பிடிக்கிறோம்.
ஆனால் உணவுப் பிரியர்களுக்கு டயட்டில் இருப்பது என்பது சற்று கடினமான பணியாக இருக்கும்.
கிரீன் டீ
உடல் பருமனை குறைக்க கிரீன் டீயுடன் நாளைத் தொடங்கலாம். ஏனெனில் கிரீன் டீ உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையைக் குறைக்க உதவும். கிரீன் டீ மிகவும் சுவையுடன் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். கிரீன் டீயில் தயனைன் உள்ளது.
இந்த அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
ஆப்பிள் சைடர் வினிகர்
தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு ஆப்பிள் சிடார் வினிகர் சிறந்த தீர்வாக உள்ளது.
ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதன் மூலம் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
ஆப்பிள் சிடார் வினிகர் நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஒழுங்குபடுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் அல்லது சாறில் கலந்து சாப்பிடலாம்.
இது மட்டுமின்றி இதனை உட்கொள்வது வயிற்று வாயு மற்றும் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கும்.
ஆப்பிள் பழங்களை நன்றாக மசித்து அதை ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியங்களின் உதவியினால் அதை நொதிக்க செய்து ஆப்பிள் சிடார் வினிகர் தயாரிக்கப்படுகிறது.
இஞ்சி தண்ணீர்
இஞ்சி சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதிகரித்த எடையை குறைக்க விரும்பினால் காலையில் இஞ்சி தண்ணீரை உட்கொள்ளலாம்.
பொட்டாசியம் ஃபோலேட், ஜிங்க் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பண்புகள் இஞ்சியில் உள்ளன.
உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ் நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.
இஞ்சி பானம் குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிற்று பிரச்சனைகள் இல்லாமல் இருந்து, ஜீரணம் சிறப்பாக இருந்தால் தான் உடல் எடை குறையும்.
வெதுவெதுப்பான நீர்
வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலம் எடையை எளிதில் குறைக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் அன்றைய தினத்தைத் தொடங்கினால் உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து எடையைக் குறைக்கலாம்.
தூங்கி எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடல் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி மல சிக்கல் நீங்கும். இது மிகவும் சிறந்த உடை இழப்பு பானம் ஆகும்.
சீரக நீர்
சீரக நீர் ஒரு பிரபலமான எடை இழப்பு அல்லது நச்சு நீக்கும் பானம். சீரகம் எடை இழப்பை விரைவுபடுத்தும்.
சீரக நீர் என்னும் இந்த ஸ்பெஷல் பானத்தை குடிப்பதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.
சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு குணங்கள் காரணமாக, சீரகம் எடையை குறைக்க உதவும்.
மேலும் தினமும் காலையில் இதனை அருந்துவதன் மூலம், வளர்சிதை மாற்றம் தீவிரமடைகிறது.