கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தும் படையினர்
கொழும்பில் பல இடங்களில் நேற்று (12) இரவு முதல் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் அரசாங்கத்தின் மீது சில செல்வாக்கு செலுத்த தயாராக இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுத் தகவல்
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 750 பேர் கொண்ட குழுவொன்று கலகத்தனமான முறையில் நடந்து கொள்வதாக புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலகத்தனமான முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதிகளுக்கு பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவு மற்றும் முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு மேலதிகமாக, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சூழவும் , கொள்ளுப்பிட்டி சந்தியை சுற்றி மற்றும் அராலியகஹா மன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.