தக்காளி ஜூஸை இப்படி செஞ்சு குடிச்சா இத்தனை நன்மைகளா?
தக்காளி நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் ஒரு பழம். இதை காய்கறி வகைகளில் சேர்த்துக் கொண்டு, சமைத்து மட்டுமே சாப்பிடுகிறோம்.
ஆனால் தக்காளியை சமைக்காமல் பச்சையாக, ஜூஸாக எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க முடியுமாம்.
தக்காளி பழத்தில் உள்ள அடர்ந்த சிவப்பு நிறத்தில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. அவை தான் அந்த நிறத்துக்கு காரணம்.
அதனால் தக்காளி மட்டுமின்றி அடர் சிவப்பு நிற உணவுகளை எடுத்துக் கொள்வது மிக நல்லது
கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் தக்காளி ஜூஸ்
உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேரும்போது அது ரத்தக் குழாய்கள் அடைப்பை ஏற்படுத்துவதோடு மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி நோய்கள், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளை உடலைத் தாக்குகின்றன.
இவை உயிருக்கே ஆபத்தான பிரச்சினைகள். தக்காளி மற்றும் அதன் சாறை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேருவதைத் தடுக்க முடியும்.
தக்காளி சாறில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் கெட்ட கொழுப்பின் உற்பத்தியைத் தடுக்கிறது.
அதோடு இதயத் தமனிகளில் ஏற்படும் பிளேக் எனும் அடைப்பையும் ஏற்படாமல் இது தடுக்கிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
தக்காளி ஜூஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்டிரால் குறைவதோடு உடல் பருமன், ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது,
இதய ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த உதவி செய்யும்.