நான் உயிருடன் உள்ளேன்; அதிர்ச்சி கொடுத்த நடிகை பூனம் பாண்டே!
இறந்ததாக சொல்லப்பட்ட நடிகை பூனம் பாண்டே, தான் உயிருடன் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பப் பை புற்றுநோயால் நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகி இருந்தது.
சமூக வலைதளத்தில் வீடியோ
பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுதுள்ளார்.
மேலும், அதில், நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் பூனம் பாண்டேவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.